துருக்கியில் விறுவிறுப்பாக நடந்த சர்வதேச ஒட்டகச் சண்டை

துருக்கியில் விறுவிறுப்பாக நடந்த சர்வதேச ஒட்டகச் சண்டை
துருக்கியில் விறுவிறுப்பாக நடந்த சர்வதேச ஒட்டகச் சண்டை

துருக்கியில் நடத்தப்படும் ஒட்டகச் சண்டைக்கு உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சேவல் சண்டை, ஆட்டுக்கிடா சண்டையைப் போல, துருக்கியில் மிகப்பெரிய மைதானத்தில் 2 ஒட்டகங்களை சண்டையிட வைக்கும் போட்டி புகழ்பெற்றது. அந்நாட்டில் உள்ள இஸ்மிர் என்ற நகரில், 40 ஆவது சர்வதேச ஒட்டகச் சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட 152 ஒட்டகங்கள் களமிறங்கி மோதின. பழமையான இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

இதனிடையே, போட்டியின்போது ஒட்டகங்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, விலங்குகள் உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஒட்டகங்களின் உரிமையாளர்களும் போட்டியை நடத்துவோரும் களத்தில் விளையாடும்போது அவை காயப்படுத்தப்படுவதில்லை என்று விளக்கமளித்து, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com