தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: பீதியடைந்த பயணிகள்

தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: பீதியடைந்த பயணிகள்

தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: பீதியடைந்த பயணிகள்
Published on

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் பயணிகள் பீதிக்கு ஆளாகினர்.

அபுதாபியிலிருந்து எதிஹாத் EY204 என்ற விமானம் 196 பயணிகளுடன் மும்பைக்கு வந்தது. இந்த விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, எதிர்பாரதவிதமாக அதன் டயர் திடீரென வெடித்தது. உடனடியாக சாதூர்யமாக செயல்பட்ட விமானி விமானத்தை சரியான முறையில் கையாண்டு அதனை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 196 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பின்னர், விமானத்தின் டயர்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com