\
Abu Dhabi falcon auction where a young girls wish to own a rare bird
video imageinsta

ஒரு பறவைக்காக ரூ.3.85 கோடி.. அதுவும் 5 நிமிடங்களில்.. நிறைவேறிய சிறுமியின் ஆசை!

Dad's Little Princess என்ற வார்த்தை நிஜமாகவே நடந்திருக்கிறது என்பது தான் இப்போதைய ட்ரென்டிங் செய்தி. சிறுமியன் ஆசையை நிறைவேற்ற அவரது மாமா, 5 நிமிடங்களில் கோடிக்கணக்கில் செலவிட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
Published on

அபுதாபியில் நடைபெற்ற Abu Dhabi International Hunting and Equestrian Exhibition (ADIHEX) 2026 நிகழ்ச்சியில், அரிய வகை கழுகான வெள்ளை ஃபால்கன் ஒன்று நடைபெற்ற ஏலத்தில் இடம்பெற்றது. துபாயைச் சேர்ந்த Sheikha Al Mansouri என்ற சிறுமி இந்த அரிய வெள்ளை ஃபால்கனைப் பார்த்து விரும்பியிருக்கிறார்.

சிறுமியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த அவரது தாய்மாமா, ஏலத்தில் கலந்துகொண்டு வெறும் 5 நிமிடங்களுக்குள் அந்த ஃபால்கனை 1.5 மில்லியன் UAE திர்ஹாம்களுக்கு, இந்திய மதிப்பில் ரூ.3.85 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஃபால்கனின் விலை ஏன் இவ்வளவு அதிகம் என்றால், முழுவதும் வெள்ளை நிற இறகுகளைக் கொண்டிருப்பதே இந்த ஃபால்கனின் முக்கிய சிறப்பு. சுமார் 1 கிலோ எடை, 16.5 அங்குல நீளம் மற்றும் 16.5 அங்குல அகலம் கொண்ட இந்தப் பறவை, அமெரிக்காவின் Mark Moglich Falcon Farm-ல் வளர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் உடல் அமைப்பு மற்றும் வேட்டையாடும் திறனும் சிறப்பானதாம். இந்த ஆண்டு ADIHEX ஏலத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச விலையாகவும் இந்த விற்பனை அமைந்துள்ளது.

அரபு நாடுகளில் ஃபால்கன் வளர்ப்பு என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பாரம்பரியம் மற்றும் அந்தஸ்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அந்த பின்னணியில், சிறுமியின் விருப்பத்திற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஒரு பறவைக்காக ரூ.3.85 கோடி... அதுவும் 5 நிமிடங்களில். இந்த ஃபால்கனை ஏலம் எடுக்கும் வீடியோவும், ஏலம் முடிந்ததும் ஃபால்கனை சிறுமி எடுத்து வரும் அந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com