\
பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழா

பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழா

பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழா
Published on: 

ஆல்பிரட் நோபலின் நினைவு தினத்தையொட்டி இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் மன்னர் கார்ல் குஸ்டாஃப், ராயல் ஸ்வீடிஷ் அகடாமி உறுப்பினர்கள் மற்றும் பரிசு வென்றவர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ‌ஆகி‌ய துறைகளில் பரிசுகளை வென்றவர்களுக்கு ஸ்வீடன் மன்னர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

நோபல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியரான அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளே ஆகியோர் இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com