இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் அமெரிக்காவில் கொலை? 

இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் அமெரிக்காவில் கொலை? 

இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் அமெரிக்காவில் கொலை? 
Published on

இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அமெரிக்காவில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் துஷார் அட்ரே(50). இவர் அமெரிக்காவில் ‘அட்ரே நெட்’ என்ற டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கலிஃபோர்னியாவின் சாண்டா குரூஸ் (Santa Cruz) பகுதியில் வசித்து வருகிறார். இவரைக் கடந்த1ஆம் தேதி முதல் காணவில்லை என்று காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக அவரது இல்லத்திலிருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துஷாரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று துஷாரை அவரது பிஎம்டபிள்யூ காரில் சடலாமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சாண்டா குரூஸ் காவல்துறையினர்,“நாங்கள் நடத்திய விசாரணையில் துஷார் அட்ரே சரியாக 1ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு அவரது இல்லத்திற்கு அருகிலிருந்து கடத்தப்பட்டுள்ளார். அப்போது அவர தனது வெள்ள நிற பிஎம்டபிள்யூ காரில் சென்ற தகவல் கிடைத்தது. 

இதனை வைத்து தேடியதில் சாண்டா குரூஸ் மலை பகுதியில் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் துஷார் அட்ரே சடலமாக இருந்தார். அவரின் கொலை குறித்து விசாரித்து வருகிறோம். இந்தக் கொலைக்கு வழிபறி காரணம் இருக்கும் என்ற நாங்கள் சந்தேகப்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com