பிரிட்டன்: 90 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆர்ட்வாக் பாலூட்டி இனம் - வீடியோ வெளியிட்ட ZOO

பிரிட்டன்: 90 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆர்ட்வாக் பாலூட்டி இனம் - வீடியோ வெளியிட்ட ZOO
பிரிட்டன்: 90 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆர்ட்வாக் பாலூட்டி இனம் - வீடியோ வெளியிட்ட ZOO

பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் மிருகக் காட்சி கூடம் ஒன்றில் 90 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ட்வாக் என்ற உயிரினம் குட்டி ஒன்றை ஈன்றெடுத்துள்ளது. பிறந்த சில நாட்களான அந்த குட்டி ‘பெண்’ என தெரிவித்துள்ளது மிருகக் காட்சி கூட நிர்வாகம். அந்த குட்டி தோற்றத்தில் பார்க்க ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வரும் ‘Dobby’ கதாப்பத்திரம் போல இருப்பதால் அதற்கு அந்த பெயரே வைக்கப்பட்டுள்ளது. 

பாலூட்டிகளான இந்த ஆர்ட்வாக் உயிரினம் ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்டவை. பன்றியை போல இருக்கிறது. ஆர்ட்வாக் என்பது ஆப்பிரிக்க மொழி பெயராகும். நிலப்பன்றி என்பது இதன் அர்த்தம். எறும்புகள் மற்றும் கரையான்களை உணவாக உட்கொள்ளும் உயிரினம் இது. இரவு நேரத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் உயிரினம் இது. நன்றாக நீந்தும் தன்மை கொண்ட இந்த உயிரினம் 23 ஆண்டுகள் வரை வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிவிரைவாக வளை (குழி) தோண்டும் தன்மை கொண்டது இந்த உயிரினம் என சொல்லப்படுகிறது. பிறந்த குட்டிகள் ஆறு மாதம் முதல் தனியாக வளை தோண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பழுப்பு சாம்பல் நிறத்தில் இந்த உயிரினம் இருக்குமாம். இறைச்சிக்காக இது வேட்டையாடப்படுவதும் உண்டாம். இதன் எதிரி மலைப்பாம்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com