ஐ போன் வாங்க கிட்னியை விற்ற சீன இளைஞர் - உயிருக்கு போராடும் அவலநிலை

ஐ போன் வாங்க கிட்னியை விற்ற சீன இளைஞர் - உயிருக்கு போராடும் அவலநிலை
ஐ போன் வாங்க கிட்னியை விற்ற சீன இளைஞர் - உயிருக்கு போராடும் அவலநிலை

சீன தேசத்தின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்தவர் 25 வயதான இளைஞர் வாங் ஷாங்கன். சிறு வயதிலிருந்தே ஐ போனை வாங்க வேண்டுமென்ற பெருங்கனவு அவருக்கு. இருப்பினும் அதற்கான பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். 

அப்போது அவருக்கு அறிமுமான சில கூடா நட்புகளால் ஆன்லைன் கள்ளச் சந்தையில் கிட்னியை வாங்கும் நண்பர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி தனது வலது கிட்னியை 3273 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். அதை செய்த போது அவருக்கு 17 வயது. 

அறுவை சிகிச்சை மூலம் வாங்கின் கிட்னியை பெற்றுள்ளனர். அந்த பணத்தில் வாங் ஐபாட் 2 மற்றும் ஐ போன் 4 வாங்கியுள்ளார். ‘உயிர் வாழ ஒரு கிட்னி போதும்’ எனவும் வாங் சொல்லியிருந்தார். 

சில தினங்களில் அவரது மற்றொரு கிட்னியும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. மகனின் உடல்நிலையை கவனித்த வாங்கின் தாயார் அவரிடம் விசாரித்ததில் விவரத்தை அறிந்து கொண்டுள்ளார். 

பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வாங் தினந்தோறும் டயாலாசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற மோசமான நிலையில் உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com