சீனா: டேட்டிங் சென்ற நபரின் வீட்டில் 4 நாட்கள் சிக்கிய பெண்-திடீர் லாக்டவுன் பரிதாபங்கள்!

சீனா: டேட்டிங் சென்ற நபரின் வீட்டில் 4 நாட்கள் சிக்கிய பெண்-திடீர் லாக்டவுன் பரிதாபங்கள்!

சீனா: டேட்டிங் சென்ற நபரின் வீட்டில் 4 நாட்கள் சிக்கிய பெண்-திடீர் லாக்டவுன் பரிதாபங்கள்!
Published on

இன்றைய உலகில் டேட்டிங் என்பது பெரும்பாலானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி நிற்கிறது. கேஷுவல் டேட்டிங், பிளைண்ட் டேட்டிங், ஸ்பீட் டேட்டிங், காபி குடிப்பதை கூட டேட்டிங் என சொல்வது உண்டு. அப்படித்தான் சீனாவை சேர்ந்த ‘வாங்’ என்ற பெண் ஒரே ஒரு நாள் பிளைண்ட் டேட்டிங் சென்றுள்ளார். அவர் சென்ற நேரம் பார்த்து அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஊரடங்கு அமல்படுத்த நான்கு நாட்கள் டேட்டிங் சென்றவர் வீட்டில் தங்கியிருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளார். 

அந்த அனுபவத்தை சமூக வலைதளமான ‘வி சேட்டில்’ பகிர்ந்துள்ளார் வாங். இனி அவர் தொடர்கிறார் “Zhengzhou நகருக்கு நான் சென்றவுடன் கொரோனா பரவல் காரணமாக அந்த மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. நான் வேறு வழி இல்லாமல் டேட் சென்றவரின் வீட்டில் நான்கு நாட்கள் தங்க வேண்டிய சூழல் உருவானது. இது எனது ஐந்தாவது டேட். எனக்கு வயதாகி வருவதால் எனது குடும்பத்தினர் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்லி 10 வரன்களை பார்த்துள்ளனர்.

நான் டேட் செய்த நபர் தனது சமையல் கைவண்ணத்தை காட்ட விரும்புவதாக சொல்லி என்னை அவரது வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். நான்கு நாட்கள் எனக்கு ருசியாக சமைத்து பரிமாறினார். அவர் சமையலின் ருசி பேசிய அளவுக்கு கூட அவர் என்னிடம் பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com