10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி
கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்றார். ஏரி ஒன்றில் நீரில் மூழ்கிய போது அவர் இந்த நிலைக்கு சென்றதாக தெரிகிறது. இதனிடையே கடந்த 10 வருடங்களாக அவருக்கு அப்பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அந்தப் பெண் தனக்கு என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல் படுத்த படுக்கையாகவே இருந்தார். ஆனால் உயிர் மட்டும் இருந்தது.
இந்நிலையில் இப்பெண் கடந்த 29-ஆம் தேதி பிரசவ வலியால் முணங்கியுள்ளார். இதனையடுத்து செவிலியர்கள் உதவியுடன் அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பீனிக்ஸ் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்பதால் சுகாதார மையத்தில் பணியாற்றும் அனைத்து ஆண்களுக்கும் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன்மூலம் குற்றவாளி யார் என்பது தெரிந்துவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.