\
வாகன ஓட்டிக்கு Hi-Fi கொடுத்த கரடி.. வைரலாகும் க்யூட் வீடியோ!

வாகன ஓட்டிக்கு Hi-Fi கொடுத்த கரடி.. வைரலாகும் க்யூட் வீடியோ!

வாகன ஓட்டிக்கு Hi-Fi கொடுத்த கரடி.. வைரலாகும் க்யூட் வீடியோ!
Published on

வன விலங்குகள் நடமாடும் பகுதியில் பொதுவாக மனித நடமாட்டத்துக்கு தடையோ அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் மனித விலங்குகள் மோதல் ஏற்படுவதும், மனித விலங்குகளுக்கிடையே சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் குவிந்த கரடிக் கூட்டத்தில் இருந்த ஒரு கரடி காரில் வந்த ஒருவருக்கு கை அசைத்து ஹைஃபை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Pubity (@pubity)

இது தொடர்பான வீடியோவை Pubity என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை பல மில்லியன் கணக்கானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

அதில், வன விலங்கான கரடிக் கூட்டம் சாலையை கடப்பதற்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு கரடி திடீரென அங்கிருந்த வாகன ஓட்டியிடம் சென்று கையை கொடுத்து, சற்று யோசித்துவிட்டு சென்றுவிட்டது.

இந்த நிகழ்வை பின்னால் இருந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com