உலகம்
அர்ஜென்டினா: தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது மோதிய ரயில் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
அர்ஜென்டினா: தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது மோதிய ரயில் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
மெர்லோ என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கார் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. இதனை சரிசெய்ய ஓட்டுநர் மட்டும் கீழே இறங்கியுள்ளார். ஆனால், அதற்குள் அதிவேகமாக வந்த ரயில் கார்மீது மோதியது.
இதில் காருக்குள் இருந்த 3 குழந்தைகள் மற்றும் ஓட்டுநரின் மனைவி காயம் அடைந்தனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.