லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் அதி பயங்கர தீவிபத்து!

லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் அதி பயங்கர தீவிபத்து!

லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் அதி பயங்கர தீவிபத்து!
Published on

லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் அதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சவுத் வார்க் (SOUTHWARK) ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 70க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அண்டை கட்டடங்களில் உள்ளவர்களை காவல்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர். வாகன நிறுத்துமிடத்திலும் தீ பரவியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் பரவியது.

அதனால், அருகில் வசிக்கும் மக்கள் வீட்டு கதவு, ஜன்னல்களை மூடி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதால், பிற இடங்களுக்கு செல்ல இயலாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com