திடீரென உயிரிழந்த தாய் ! மீளா துயரில் தவிக்கும் உக்ரைன் வாழ் தமிழக மாணவர்

திடீரென உயிரிழந்த தாய் ! மீளா துயரில் தவிக்கும் உக்ரைன் வாழ் தமிழக மாணவர்

திடீரென உயிரிழந்த தாய் ! மீளா துயரில் தவிக்கும் உக்ரைன் வாழ் தமிழக மாணவர்
Published on

வேலூரில் உக்ரைனில் சிக்கிய மகன் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்த தாய், எதிர்பாராவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்த தம்பதி சங்கர் - சசிகலா. இவர்களது மகன் சக்திவேல், உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் 5ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது பெற்றோர் சங்கர் மற்றும் சசிகலா தங்கள் கிராமத்தில் விவசாயம் வேலை செய்து வருகிறார்கள்.

தற்போது உக்ரைனில் நடைப்பெற்று வரும் போர் பகுதியில் சிக்கியுள்ள தனது மகனை நினைத்து தாய் சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்த நிலையில், எதிர்பாராவிதமாக மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் மத்திய மற்றும் மாநில அரசு, சக்திவேல் மற்றும் அவருடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com