\
சோமாலியா: திறந்த வெளி உணவகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு

சோமாலியா: திறந்த வெளி உணவகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு

சோமாலியா: திறந்த வெளி உணவகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு
Published on: 

ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஹிரான் மாகாணத்தில் உள்ள பெலட்வெய்னே நகரத்தில் உள்ள திறந்தவெளி உணவகத்திற்கு சென்ற நபர் ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்தார். அதில் அங்கிருந்த 15 பேர் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சிகிச்சையில் உள்ள பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

இதையும் படிக்க: கனடா: கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - வெடிகுண்டு வீசிய காவல்துறை

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com