\
A stroke of luck for a small nation following Trump's announcement
.ai vs .siReuters

டிரம்ப்பின் வார்த்தையால் வெடித்த சிக்கல்: சிறிய நாட்டுக்கு அதிர்ஷ்டம்|போட்டி போடும் பெருநிறுவனங்கள்!

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர் சிறிய நாட்டுக்கு அடித்த ஜோகம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Published on: 

தற்போதைய காலகட்டத்தில் Artificial inteligence என அழைக்கப்படும் AI துறை கொடிகட்டி பறந்துவருகிறது. கூகிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா என உலகின் பெருநிறுவனங்கள் அனைத்தும் இந்த துறையில் பல்வேறு கோடிகளை முதலீடு செய்துள்ளன.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் Artificial inteligence என்ற வார்த்தை போலியாக தோன்றுவதாகவும், அதற்குப் பதிலாக இனி Super Intelligence என பயன்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அதோடு அமெரிக்க அரசு தனது அதிகாரப்பூர்வ அரசு அறிக்கைகளில் Artificial Intelligence என்ற வார்த்தைக்கு பதிலாக இனி Super Intelligence அல்லது SI என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்Reuters

இது AI துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரு நிறுவனங்கள் எல்லாம் தங்களின் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை குறிக்க.ai என்ற டொமைனையே பயன்படுத்தி வந்தனர். இந்த .ai என்ற டொமைன் கரீபியன் பகுதியை சேர்ந்த Anguilla நாட்டுக்கு சொந்தமானதாகும். இதனால் இதுவரை அந்த நாட்டின் டொமைனுக்கு அதிக மதிப்பு இருந்தது. இதனால் அந்த அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானமும் வந்துள்ளது.

தற்போது டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு பின்னர் .si என்ற டொமைனின் உரிமை ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவிடம் (Slovenia) இருக்கும் நிலையில், அதற்கு அதிக மதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னர் மாதத்திற்குச் சராசரியாக 3,500 .si டொமைன்கள் மட்டுமே பதிவாகும் நிலையில், தற்போது ஒரே நாளில் 3,700-க்கும் மேற்பட்ட புதிய டொமைன் பதிவுகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

AI
AIReuters

இதன் மூலம் பல நூறு கோடிகள் வருமானம் ஸ்லோவேனியாவுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கோலாவின் ஒரு .ai டொமைனைப் பதிவு செய்ய ஆண்டுக்குச் சுமார் 140 முதல் 180 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் நிலையில், ஸ்லோவேனியாவின் .si டொமைனைப் பதிவு செய்ய ஆண்டுக்குச் வெறும் 12 முதல் 17 அமெரிக்க டார்கள் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுவதால், இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

A stroke of luck for a small nation following Trump's announcement
பெரும் ஆபத்தில் ஐரோப்பா : சுவிட்சர்லாந்தில் தொடங்கிய அழிவு.. எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com