குரில் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜப்பான்-ரஷ்யா குரில் தீவில் நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை அறிவிக்கவில்லை
குரில் தீவு
குரில் தீவுPT

இயற்கை பேரிடர் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஜப்பான் மற்றும் ரஷ்யா இடையே உள்ள குரில் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குரில் தீவு

குரில் தீவானது ஜப்பானிய தீவான ஹொக்கைடோவின் வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து ஓகோட்ஸ்க் கடலை பிரிக்கும் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு முனை வரை நீண்டுள்ளது. இத்தீவில் சிறிதும் பெரிதுமாக 56 தீவுகளை உள்ளடக்கி உள்ளது.

இத்தீவில் குறைந்தது 100 எரிமலையாவது இருக்கும் என்றும் அதில் 30 மேற்பட்ட எரிமலைகள் செயலில் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இத்தீவில் நிலநடுக்கம் பொதுவான ஒரு நிகழ்வு என்றாலும், இன்று அங்கு 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குரில் தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது கடலுக்கு கீழ்10 கி,மீ மற்றும் 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com