இவர் ஒரு நல்ல திருடன்- சீனாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்
சீனாவில் பணம் பறித்தவர் மனம் மாறி அதை திரும்ப ஒப்படைத்த சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மாதம் 16ஆம் தேதி சீனாவின் ஹேயூஹான் நகரில் உள்ள ஐசிபிசி வங்கி ஏடிஎம்மில் லீ என்ற பெண் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு நுழையும் நபர் ஒருவர் கத்தியைக் காட்டி லீயை மிரட்டு அவர் எடுத்த பணத்தை பிடிங்கிக்கொள்கிறார். மீண்டும் அந்த பெண்ணை மிரட்டும் அந்த நபர், வங்கிக்கணக்கில் உள்ள மீதிப்பணத்தையும் எடுத்துத்தரக்கோரி கேட்கிறார்.
வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதையும் காட்டச் சொல்கிறார். அவசரம் அவசரமாக லீ தனது வங்கிக்கணக்கு இருப்புதொகையை காட்ட லீயின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என ஏடிஎம் இயந்திரம் காட்டுகிறது.
வங்கிக்கணக்கில் பணமில்லாததை அறியும் அந்த மர்ம நபர், உடனே மனம் மாறி தான் பறித்த பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.
ஏடிஎம்மில் உள்ள சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'இவர் ஒரு நல்ல திருடன்’ என்றும், 'இரக்க குணம் படைத்த திருடன்' என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சிசிடிவி பதிவை வைத்து அந்த மர்ம நபரை சீன போலீசார் கைது செய்துள்ளனர்.
வீடியோ: