\
A resolution to withdraw US troops
donald trump x page

ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு.. முடிவடையும் ஈரான் போர்? நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

ஈரான் போரில் பங்கேற்றுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Published on

அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். குறிப்பாக, வெனிசுலா மீது அவர் எடுத்த ராணுவ நடவடிக்கையும், ஈரான் மீது அவர் மேற்கொண்ட போர் நடவடிக்கையும் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

US Congress Lower House
US Congress Lower House

இந்தச் சூழலில் நாடாளுமன்ற கீழவையில் ஈரான் போரில் இருந்து அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் மேலவையிலும் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் மேலவையிலும் நிறைவேற்றப்பட்டால் அது உடனடியாக சட்டமாக நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலவையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 இடங்களும் உள்ளன. எனினும் கீழவையில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த பலர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

அந்த வகையில், மேல்சபையிலும் இந்த தீர்மானத்துக்கு ட்ரம்ப் கட்சியினர் ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல்சபையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வேறு வழியின்றி ட்ரம்புக்கு ஈரான் அமெரிக்கப் படைகளை ஈரானில் இருந்து திருமபப் பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

A resolution to withdraw US troops
வரலாறு காணாத உச்சம்.. ஆயுத ஏற்றுமதியில் அசத்தும் இந்தியா.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com