ஹிட்லர் கையெழுத்திட்ட அரிய புத்தகம்: ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

ஹிட்லர் கையெழுத்திட்ட அரிய புத்தகம்: ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

ஹிட்லர் கையெழுத்திட்ட அரிய புத்தகம்: ரூ.8 லட்சத்துக்கு ஏலம்
Published on

ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் கையெழுத்திட்ட "மெயின் கம்ப்ஃ’ புத்தகம் அமெரிக்காவில் 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

''போரில் மட்டுமே உன்னதமான மனிதன் பிழைப்பான்'' என்ற வாசகத்துடன் அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் 1930, ஆகஸ்ட் 30 என தேதியிட்டு ஹிட்லர் கையெழுத்திட்டுள்ளார். மிகுந்த அரிதான இந்த புத்தகத்தை அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள செசாபீக் நகரில் அமைந்துள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏல நிறுவனம் ஏலம்விட்டது. 

இதனை 8 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரது பின்னணி என்ன? என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு விலைபோனது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com