புற்றுநோய் திசுக்களை கண்டறிய புதிய வகை பேனா ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பேனாவின் மூலம் பத்து நொடிகளில் புற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 'மாஸ்பெக் பேனா' என்ற புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் புற்றுநோய் கட்டி கண்டறியப்படுவதுடன், அதனை அகற்றவும் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் சில புற்று நோய் அணுக்கள் உடலில் தேங்கியிருக்கும். இந்த பாதிப்பை மாஸ்பெக் பேனா மூலம் சரி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர். அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். அதன்பின் அங்கிருக்கும் திசுக்கள் புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது மாஸ்பெக் உறுதிப்படுத்தப்படுகிறது. சோதனையின் முடிவில் இந்தத் தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில் 96 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.