முக்ககவசம் அணியச் சொன்னது குத்தமாய்யா…  அமெரிக்காவில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது!

முக்ககவசம் அணியச் சொன்னது குத்தமாய்யா… அமெரிக்காவில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது!

முக்ககவசம் அணியச் சொன்னது குத்தமாய்யா… அமெரிக்காவில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது!
Published on

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் முகக்கவசம் அணிய வலியுறுத்திய சக கடைக்காரரிடம் துப்பாக்கிக் காட்டி மிரட்டிய நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இங்குள்ள வால்மார்ட் ஸ்டோரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முகக்கவசம் அணிவது உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகி்ன்றன.    

அந்த நபரின் பெயர் வின்சென்ட் ஸ்கேவெட்டா. வயது 28. பயங்கர ஆயுதத்தால் தாக்கியது மற்றும் துப்பாக்கியை முறையற்று பயன்படுத்தியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

“மகனே உன்னை சிறை வரவேற்கிறது. இதுவொரு பாடமாக இருக்கட்டும். இது மிக மோசமாக முடிந்திருக்கலாம்“ என காவல்துறையினர் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். முகக்கவசம் அணிய வலியுறுத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஸ்கேவெட்டா துப்பாக்கியை எடுத்து மிரட்டத் தொடங்கிவிட்டார்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த நிலையில்கூட, முகக்கவசம் அணிய அமெரிக்கர்கள் மறுத்துவருகின்றனர். மேலும், அதிபர் டொனால்ட் டிரம்பும் அவருடைய அரசியல் ஆதரவாளர்களும் முகக்கவசத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com