உலகம்
25 வயதில் ஆண் என்பதை உணர்ந்த திருமணமான பெண் - மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி!
25 வயதில் ஆண் என்பதை உணர்ந்த திருமணமான பெண் - மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி!
சீனாவில் திருமணமான 25 வயதான இளம் பெண் ஒருவர் கருத்தரிக்க முயற்சித்த போது தான் பிறப்பால் ஒரு ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் முதல் நிலையில் உள்ளது சீன நாடு. கடந்த ஒரு வருடமாக கருத்தரிக்க முயற்சித்த அவருக்கு அந்த முயற்சியில் தோல்வி கிடைத்துள்ளது. தான் பெண்ணுக்கான பிறப்புறுப்புடன் பிறந்திருந்தாலும் ஆணுக்கான Y குரோமோசோமுடன் இருந்துள்ளார் என்பதை மருத்துவ பரிசோதனையின் மூலமாக அறிந்துள்ளார் அவர். அதுவே தான் கருத்தரிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளார்.
பிறந்தது முதலே பெண்ணாக வாழ்ந்த ஆணான அவரது எலும்புகள் பருவ வயதிற்கு பிறகு வளர்ச்சி அடையாததையும் எக்ஸ் ரே மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

