அதிவேகம்.. சவுதியின் மெக்கா வாசலை காரால் மோதிய நபர் - வீடியோ.!

அதிவேகம்.. சவுதியின் மெக்கா வாசலை காரால் மோதிய நபர் - வீடியோ.!

அதிவேகம்.. சவுதியின் மெக்கா வாசலை காரால் மோதிய நபர் - வீடியோ.!
Published on

சவுதியில் மிகவும் பிரபலமானது மெக்கா மசூதி. வெள்ளிக்கிழமை இரவு காரில் அதிவேகத்தில் வந்த சவுதி நபர் ஒருவர் மெக்கா வாயிலில் மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் வந்த அந்த கார் தடுப்புக்களைக் கடந்து தெற்கு வாயிலின்மீது மோதி நின்றதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காருக்குள் இருந்த நபர் சுயநினைவின்றி இருந்ததாகவும், அவரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அவரை வழக்கறிஞர்கள் முன்பு ஆஜர்படுத்தி, குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சேதமடைந்த அந்த நபரின் காரை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தும் வீடியோக் காட்சி ஒன்றை செய்தி நிறுவனம் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

இந்த கிராண்ட் மசூதியில் உள்ள காபாவில் ஒருநாளைக்கு ஐந்துமுறை பிரார்த்தனை நடக்கிறது. கொரோனா ஊரடங்கால் நீண்டநாட்கள் பூட்டப்பட்டிருந்த இந்த மசூதி சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. க்யூரான் டிவி வெளியிட்ட விபத்து வீடியோவில் விபத்திற்கு முன்னும், அதற்கு பிறகும் காபாவில் மக்கள் கூடியிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com