ஃபைசர் தடுப்பூசியை எப்போது அனுப்புவீங்க? அனுப்பிய மெயிலும் கிடைத்த பதிலும்

ஃபைசர் தடுப்பூசியை எப்போது அனுப்புவீங்க? அனுப்பிய மெயிலும் கிடைத்த பதிலும்
ஃபைசர் தடுப்பூசியை எப்போது அனுப்புவீங்க? அனுப்பிய மெயிலும் கிடைத்த பதிலும்

(கோப்பு புகைப்படம்)

புனேவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தியாவிற்கு ஃபைசர் தடுப்பூசியை எப்போது அனுப்புவீர்கள் எனக்கேட்டு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு மின்னஞ்சல் அனுப்பிய நிலையில், அதற்கு பதிலும் கிடைத்துள்ளது.

புனேவை சேர்ந்த பிரகாஷ் மிர்புரி என்ற நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளார். தனிமையில் இருக்கும் நேரத்தில், எந்த தடுப்பூசி மிகுந்த பயனளிக்கிறது என்பதை தேடியுள்ளார். அப்போது, அமெரிக்காவில் இருக்கும் பிரகாஷின் நண்பர், ஃபைசர் தடுப்பூசி மிகுந்த பலனளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக ஃபைசர் தடுப்பூசியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆல்பர்ட் போர்லாவிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எப்போது இந்தியாவிற்கு தடுப்பூசியை அனுப்புவீர்கள் எனவும், தங்களது குடும்பத்தினர் ஃபைசர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஆல்பர்ட் போர்லா பிரகாஷ் மிர்புரியின் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியதை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஃபைசர் தடுப்பூசியை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், ஃபைசர் தடுப்பூசிக்கு தாங்கள் அளித்துள்ள வரவேற்பை பாராட்டுவதாகவும் ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com