
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அலெக்ஸி நாவல்னிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபருக்கு எதிராக அலெக்ஸி நாவல்னி அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினார். இதற்காக கைதுசெய்யப்பட்ட நாவல்னி 20 நாட்களுக்குப் பின் அண்மையில் விடுவிக்கப்பட்டபோது ஏராளமானோர் திரண்டு வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடகூடாது என்பதற்காகவே ரஷ்ய அரசு தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிவித்திருந்தார்.