விமானங்களில் லேப்டாப்: தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!

விமானங்களில் லேப்டாப்: தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!

விமானங்களில் லேப்டாப்: தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!
Published on

வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் விமானங்களில் லேப்டாப் கொண்டு வர, விரைவில் தடை விதிக்கப்படும் என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ’அமெரிக்க மக்கள் அதிகமாக செல்லும் விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் ஆர்வம் செலுத்துவதால், வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் துருக்கி உட்பட 10 விமான நிலையங்களில் இருந்து லேப்டாப் எடுத்துவர அமெரிக்க அரசு மார்ச் மாதத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், உளவுத்துறை அளித்துள்ள தகவலின் பேரில், அமெரிக்காவிற்கு அதிகளவில் அச்சுறுத்தல்கள் இருப்பதால், விமானங்களில் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது என்றும், இந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஜான் கெல்லி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com