டர்ஹாம் நாட்டில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு 5 கால்கள் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான டர்ஹாம்மில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் சில நாட்களுக்கு முன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இது பிறக்கும் போதே 5 கால்களுடன் பிறந்தது அதன் உரிமையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி மக்கள் பலரும் இந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
5 கால்கள் இருப்பது இந்த ஆட்டுக்குட்டியின் ஓட்டத்தையோ அல்லது தாவிச்செல்லும் விதத்தையோ எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மற்ற ஆட்டுக்குட்டிகளைப் போலவே இதுவும் இயல்பாக நடக்கிறது.
இதன் முன் வலது காலுக்கு மேல் ஒரு பாதக்குழம்பு வெளிவந்திருப்பத்தையும் காண முடிகிறது. இதுகுறித்து கூறும் விலங்கியல் ஆர்வலர்கள், இது ஆறாவது கால் எனவும், வளர்ச்சியடையாமல் தொடக்கத்திலேயே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.