a japanese man who earns rs 69 lakh per year on rent friend service
ஷோஜி மோரிமோட்டோஎக்ஸ் தளம்

வாடகை நண்பர் சேவை.. ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதிக்கும் ஜப்பான் நபர்!

ஜப்பானில் தனிமையில் இருப்பவர்களுக்கு நண்பராக வாடகைக்கு செல்லும் நபர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
Published on

சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அத்தகைய வழிகளை நாம் தெரிந்துகொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்கு ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர் உதாரணமாகத் திகழ்கிறார். ஜப்பானைச் சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ. இவருக்கு 41 வயதாகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த அவர், தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாகப் போய்ச் சென்று தங்கி ஆறுதல் கூறியுள்ளார். இது, நாளடைவில் வருமானத்தைத் தரக்கூடியதாக மாற, இன்று அந்த நபர் ஆண்டுக்கு 80,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69 லட்சம்) சம்பாதித்து வருகிறார்.

a japanese man who earns rs 69 lakh per year on rent friend service
japanese manx page

தனிமையில் இருப்பவர்களுக்கு உரையாடும் நபராகவும், நட்பை நாடுபவர்களுக்கு வாடகை நண்பராகவும் செல்லும் பணியில் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டி வருகிறார். மேலும், ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்யும்போது பேச்சுத் துணைக்காக நேரில் செல்வது, வீடியோ காலில் அவர்களுடன் உரையாடுவது போன்ற சேவைகளையும் அவர் செய்து வருகிறாராம். அதேநேரத்தில் அவர் பாலியல் செயல்பாடுகள், காதல் துணை போன்றவற்றுக்கு இடம்கொடுப்பது கிடையாது. இதன்மூலம் அவர் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோரிக்கைகளையும் பெற்றுவருகிறார். அதற்குத் தனியாக 2 முதல் 3 மணிநேரத்துக்கு அதிகபட்சமாக 10,000 முதல் 30,000 யென் (டாலர் 65 முதல் டாலர் 195 வரை) வரை கட்டணம் பெற்று வருகிறார்.

a japanese man who earns rs 69 lakh per year on rent friend service
ஜப்பான் | விரைவில் வரப்போகிறது வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நடைமுறை!

இப்படி, அவர் அதிகம் சம்பாதித்தாலும் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நிற்பது, குளிரில் பல மணிநேரம் நிற்பது, அந்நியர்களுடன் மட்டும் பார்ட்டிகளில் கலந்துகொள்வது, ஒன்றும் செய்யாமல் பெரிய பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் தனியாக நிற்பது, யமனோட் ரயில் பாதையில் 17 மணி நேரப் பயணம் செய்தது போன்ற பல்வேறு கடினமான சூழலையும் தான் சந்தித்துள்ளதாக ஷோஜி தெரிவித்துள்ளார்.

a japanese man who earns rs 69 lakh per year on rent friend service
japanese manx page

ஜப்பான் ஒரு தனித்துவமான மற்றும் வளமான வாடகை சேவைத் துறையைக் கொண்டுள்ளது. அங்கு தனிநபர்கள், பல்வேறு சமூகச் செயல்பாடுகளை நிரப்ப தற்காலிக தோழர்களை நியமிக்கலாம். இந்தத் தொழிலைக் கண்காணிப்பதற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஜப்பான் பரந்த அளவிலான வாடகை சேவைகளுக்கு தாயகமாக உள்ளது. சமூக நிகழ்வுகளுக்கு தற்காலிக தோழிகள் அல்லது ஆண் நண்பர்களை வழங்குகிறது. தனிமையைப் போக்க, தோழமைக்காக நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறார்கள்.

a japanese man who earns rs 69 lakh per year on rent friend service
ஜப்பான் | விண்ணில் ஏவிய சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறிய ராக்கெட்.. 2வது முறையும் தோல்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com