அமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி

அமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி

அமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி
Published on

அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா மற்றும் கனடாவில் வங்கிச் சேவைகளை வழங்கும் கேபிடள் ஒன் நிறுவனத்தில் இருந்த தரவுகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2015 முதல் 2019 வரை கிரெடிட் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த 10 கோடி பேர் மற்றும் கனடாவை சேர்ந்த 60 லட்சம் பேரின் விவரங்கள் களவாடப்பட்டுள்ளன. 

கடந்த 19ஆம் தேதி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் திருட்டு தொடர்பாக மென்பொறியாளர் பைஜ் தாம்ப்ஸன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தில் இவர் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ள கேபிடள் ஒன் நிறுவனம், தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்காவில் கிரெடிட் கார்டு சேவை வழங்கும் மிகப்பெரிய நிறுவனம் கேபிடள் ஒன் என்பது கு‌‌றிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com