16 லட்சம் பணத்தை தின்ற ஆடு !

16 லட்சம் பணத்தை தின்ற ஆடு !

16 லட்சம் பணத்தை தின்ற ஆடு !
Published on

மத்திய செர்பியாவில் ஆடு ஒன்று 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தின்று தீர்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே உள்ள கிராமம் ரனிலோவிக். இக்கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தினர் ஒருவர் புதிதாக 10 ஹெக்டர் நிலம் வாங்க திட்டமிட்டு பணம் சேர்த்துள்ளார். கிட்டதட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் சேர்த்து வைத்திருந்தனர். இந்நிலையில் நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை வீட்டிலுள்ள மேசையில் வைத்துவிட்டு கதவை மூடாமல் அவர்கள் வயலுக்குச் சென்றுவிட்டனர்.

இந்த சூழலில் அவர்கள் வீட்டில் வளர்த்த ஆடு பணம் வைத்திருந்த அறைக்குள் நுழைந்து மேசையில் இருந்த பதினாறு லட்சத்தையும் தின்று தீர்த்துவிட்டது. தங்கள் நிலம் வாங்க திட்டமிட்டிருந்த அந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஆம் வீடு திரும்பியவர்கள் பணத்தை காணாமல் தேடியபோது ஆட்டு வாயில் பணத் துகள்கள் மிச்சம் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் ஒட்டுமொத்தமாக வைத்திருந்த பதினாறு லட்சம் பணத்தையும் ஆடு தின்று தீர்த்துள்ளதை அறிந்து, பணத்தை தின்று தீர்த்த ஆத்திரத்தில் அந்த ஆட்டை அந்த குடும்பத்தினரே கொன்று சமைத்து சாப்பிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com