உலகம்
தாலிபன் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஆப்கானிஸ்தான் சிறுமி
தாலிபன் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஆப்கானிஸ்தான் சிறுமி
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் உள்ள கிரிவா கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி க்வமர் கல். ஆப்கன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த காரணத்திற்காக சிறுமியின் பெற்றோரை கடந்தவாரம் தாலிபன் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.
அந்த தாக்குதலில் தப்பித்த சிறுமி கல், தனது வீட்டின் பாதுகாப்புக்காக இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளில் இருவரை அப்போதே சுட்டுக் கொன்றுள்ளார். அவர் சுட்டதில் தீவிரவாதிகள் குழுவில் இருந்த சிலரும் காயத்தோடு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனை அந்த மாகாணத்தின் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். துப்பாக்கியை ஏந்தியபடி இருக்கும் சிறுமி கல்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் கிரிவா கிராமத்தில் உள்ள அந்த சிறுமியை தாக்க மேலும் சில தாலிபன் தீவிரவாதிகள் வந்துள்ளனனர் என்றும் ஆனால் உள்ளூர் கிராமவாசிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து தீவிரவாதிகளை விரட்டியடித்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.