என்னது இது வித்தியாசமா இருக்கே? துருக்கியில் வட்டமிட்ட ராட்சத மேகம்

என்னது இது வித்தியாசமா இருக்கே? துருக்கியில் வட்டமிட்ட ராட்சத மேகம்

என்னது இது வித்தியாசமா இருக்கே? துருக்கியில் வட்டமிட்ட ராட்சத மேகம்
Published on

துருக்கியில் வியாழக்கிழமை காலை மிகப்பெரிய UFO (வேற்றுகிரகவாசி வாகனம்) வடிவ மேகம் ஒன்று வட்டமிட்டது. இதனை பலரும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்துள்ளனர்.

இந்த மர்ம மேகத்தை துருக்கியில் சில நகரங்களில் காணமுடிந்தது. லெண்டிகுலார் மேகங்கள் என அழைக்கப்படும் இவை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பயங்கரமான ராட்சத மேகமானது தனது நிறத்தை ஆரஞ்சிலிருந்து மஞ்சள், பிங்க் என மாற்றியதுதான் அந்த ஆச்சர்யத்துக்கு காரணம். தற்போது துருக்கியின் பர்சா நகரில் தோன்றிய இந்த மேகம்தான் இணையத்தில் கவனத்தை பெற்றுவருகிறது.

வானில் வட்டமிட்டபடியே நகர்ந்த இந்த மேகத்தை பலரும் ஏலியன் வாகனம் என்றே நினைப்பதாக பதிவிட்டு வருகின்றனர். லெண்டிகுலார் மேகங்கள் என்பவை பொதுவாக வளைந்த, பறக்கும் தட்டு போன்ற தோற்றத்தைக் கொண்டவை. நடுவில் துளையிட்டது போன்று இருக்கும். துருக்கியில் சூரிய உதயத்தின்போது தோன்றிய இந்த மேகம் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வானில் காணப்பட்டது. இந்த மேகங்கள் பூமியிலிருந்து 2,000 - 5,000 மீட்டர் உயரத்தில் தோன்றக்கூடியவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com