"ஒரு கழுதை கழுதையாகவே உள்ளது": வைரலான இம்ரான் கானின் கருத்துகள்

"ஒரு கழுதை கழுதையாகவே உள்ளது": வைரலான இம்ரான் கானின் கருத்துகள்
"ஒரு கழுதை கழுதையாகவே உள்ளது": வைரலான இம்ரான் கானின் கருத்துகள்

ஒரு போட்காஸ்ட்டில் தனது இங்கிலாந்து பயணம் குறித்து பேசியுள்ள இம்ரான் கான், ஒரு கழுதை கழுதையாகவே உள்ளது என்று கூறியுள்ளது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் மீண்டும் செய்திகளில் வந்துள்ளது. தனது இங்கிலாந்து வாழ்க்கை குறித்து இம்ரான் கான் பேசிய போட்காஸ்ட் பதிவின் கிளிப்புகள் தற்போது  ஆன்லைனில் அதிகளவில் பகிரப்படுகின்றன, அந்த ஆடியோ கிளிப்பில், "நான் இங்கிலாந்தில் மிகவும் வரவேற்கப்பட்டேன், ஆனால் நான் அதை எனது வீடாக கருதவில்லை. நான் எப்போதும் பாகிஸ்தானியனாகவே இருந்தேன். கழுதையின் மீது கோடுகளை வரைவதால் அது வரிக்குதிரையாக மாறாது. ஒரு கழுதை கழுதையாகவே உள்ளது" என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.



இந்த பதிவுகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜுனைத் அக்ரமின் போட்காஸ்டில் ஒலிபரப்பானது. மேலும், அவர் கஞ்சிஸ்வாக் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும்  நடத்தி வருகிறார். தற்போது இந்த முழு வீடியோவும் இம்ரான் கானின் அதிகாரப்பூர்வ யூடியூப்  சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 அன்று எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு மூலம் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் என்ற பெயரையும் இவர் பெற்றார். அதன்பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றிணைந்து ஷேபாஸ் ஷெரீப்பை பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தது.



பாகிஸ்தானில் புதிய ஆட்சியைக் கொண்டுவர அமெரிக்காவுடன் தனது அரசியல் எதிரிகள் கூட்டுச் சேர்ந்ததாக பலமுறை குற்றம் சாட்டியுள்ளார் இம்ரான் கான், அனால் இதனை அமெரிக்கா  கடுமையாக மறுத்துள்ளது.

இந்த சூழலில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் இம்ரான் கான், ஆனால் மே 2023 க்கு முன் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்று நாட்டின் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com