அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு முதன்முறையாக நாய் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நாய் உயிரிழந்தாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகரில் ஜெர்மன் செப்பர்டு, நாய் ஒன்றுக்கு கோரோனா நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் கடும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதோடு மூக்கில் இருந்து அடர்த்தியான சளியும் வந்தது. அதன்பிறகு நாயின் உடல்நிலை சீராக குறையத் தொடங்கியது. அதன்பின்னர் உறைந்த இரத்தத்தை வாந்தியெடுக்கத் தொடங்கியது. பின்னர் கடும்நோய்தொற்றால் அவதிப்பட்டுவந்த நாய் ஜூலை 11ஆம் தேதி கருணைக்கொலை செய்யப்பட்டது.
ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையிடம், தாங்கள் வளர்த்துவந்த 7 வயது ஜெர்மன் செப்பர்டு நாய் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் பல வாரங்களாக கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், கடுமையான சுவாசப் பிரச்சனைகளை ஏற்பட்டதை அடுத்து மே மாதம் ஒரு கால்நடை மருத்துவர் நாயை பரிசோதித்தார். பரிசோதனையின் முடிவில் நாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் நாய்க்கு கடும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு மூக்கில் இருந்து அடர்த்தியான சளிவரத் தொடங்கியது. அதன்பின்னர் நாயின் உடல்நிலை சீராகக் குறைந்து உறைந்த இரத்தத்தை வாந்தியெடுக்கத் தொடங்கியது. அதனால் ஜூலை 11 ஆம் தேதி நாய் கருணைக்கொலை செய்யப்பட்டது என்று மஹோனிஸ் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
நாயின் மரணத்தில் கொரோனா வைரஸின் பங்கு இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இரத்த பரிசோதனையில் நாய்க்கு நோயெதிர்ப்பு மண்டல புற்றுநோயான லிம்போமா இருந்ததற்கான அறிகுறிகள் இருந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நியூயார்க் நகர சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இறந்த நாயின் உடலை நெக்ரோப்சிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதுகுறித்து கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை செய்தபோது, நாயின் உடல் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டுவிட்டதாக கூறினர்.
அமெரிக்காவில் விலங்குகளுக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டிருப்பதாக யு.எஸ்.டி.ஏ தரவுத்தளத்தில் இருந்து 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் ஒரு சிங்கம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விலங்குகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்த குறிப்பிடத்தக்க ஆதாரமும் தற்போது இல்லை என்று அந்நிறுவனம் கூறுகிறது, ஆனால் சில சூழ்நிலைகளில் கொரோனா வைரஸ் மக்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.