குழந்தைக்கு 'அல்லா' என பெயர் வைக்க மறுத்த அமெரிக்க அரசு

குழந்தைக்கு 'அல்லா' என பெயர் வைக்க மறுத்த அமெரிக்க அரசு
குழந்தைக்கு 'அல்லா' என பெயர் வைக்க மறுத்த அமெரிக்க அரசு

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் தம்பதியர் அவர்களது பெண் குழந்தைக்கு ‘அல்லா’ என்று பெயரிடுவதை அந்நாட்டு அரசு தடுத்து குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு ‘அல்லா’ என்று பொருளாகும். எனவே ‘அல்லா’ என்ற பெயர் புனிதமாக இருப்பதால், குழந்தைக்கு அப்பெயரை தாங்கள் சூட்டியதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் 22 மாதமாகும் இப்பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க ஜார்ஜியா மாநில பொது சுகாதாரத்துறை மறுத்துள்ளது. தங்கள் குழந்தைக்கு அதிகாரபூர்வமான பெயர் இல்லாமல் இருப்பது தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று குழந்தையின் பெற்றோரான எலிசபெத் ஹாண்டி மற்றும் பிலால் வாக் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அரசு அதிகாரிகள், ‘குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் பெயரை இறுதியில் சேர்க்கலாம். ஆனால், அல்லா என்ற பெயர் அரபி மொழியில் உள்ள வார்த்தை. இதை பயன்படுத்துவது ஜார்ஜியா மாகாண சட்டவிதிகளுக்கு எதிரானது’ என தெரிவித்துள்ளனர்.

புனிதமான அல்லா என்ற பெயரை எங்களுடைய குழந்தைக்கு சூட்டுவதற்கு தடை விதிப்பது எங்களுடைய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. பெற்றோரின் விருப்பப்படி குழந்தைக்கு பெயர் சூட்டுவது கூட குற்றமா? எனப் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை காக்கும் அமைப்பு ஒன்றின் ஆலோசனைப்படி தற்போது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com