பாட்டிலில் அடைத்து 2500 ரூபாய்க்கு காற்று விற்பனை! ஷாக் கொடுத்த பிரிட்டன் நிறுவனம்!

பாட்டிலில் அடைத்து 2500 ரூபாய்க்கு காற்று விற்பனை! ஷாக் கொடுத்த பிரிட்டன் நிறுவனம்!
பாட்டிலில் அடைத்து 2500 ரூபாய்க்கு காற்று விற்பனை! ஷாக் கொடுத்த பிரிட்டன் நிறுவனம்!

வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனமான MY BAGGAGE. இதன் மூலம் வெளிநாடு வாழ் பிரிட்டன் மக்கள் தங்களுக்கு தேவையுள்ள நேரங்களில் தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என்கிறது அந்நிறுவனம். 

இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது இந்நிறுவனம். கண்ணாடி பாட்டிலில் காற்றை பிடித்து, மரத்தினாலான கார்க்கை கொண்டு அதை அடைத்து விற்கிறது. 

500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை 2500 ரூபாய். இந்த நிறுவனத்திடம் சிறப்பு கோரிக்கை வைத்தால் அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து கொடுக்கிறது. இதனை வாங்கும் மக்கள் சில நொடிகள் அந்த பாட்டிலின் கார்க்கை திறந்து காற்றை சுவாசித்து விட்டு, அடைத்து கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com