100 ஆண்டு பழமையான பழ கேக் கண்டுபிடிப்பு

100 ஆண்டு பழமையான பழ கேக் கண்டுபிடிப்பு

100 ஆண்டு பழமையான பழ கேக் கண்டுபிடிப்பு
Published on

அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு 106 ஆண்டுக்கு பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.

அண்டார்டிகாவின் உள்ள மிகப்பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டது. இந்த பழமையான கேக், பிரிட்டனை சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899-ம் ஆண்டு கட்டப்பட்டது. 1911-ஆ ம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார். இந்த கேக் வைப்பட்டிருந்த தகரப் பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் கெடாமல் உண்பதற்குரிய வாசத்துடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரிட்டனை சேர்ந்த பிஸ்கட் நிறுவனமான ஹன்ட்லே & பால்மர்ஸ் இந்த கேக்கை தயாரித்துள்ளதாக கண்டறியபட்டுள்ளது. இதுபோன்று அந்த கட்டடத்தில் பழமையான கருவிகள், உடைகள், அழுகிப்போன மீன் மற்றும் இறைச்சி போன்ற 1,500 பொருட்களை பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com