\
₹96 Lakh Fee for Student Work Visa in the US
Student Work VisaReuters

அமெரிக்கா | மாணவர் பணி விசாவுக்கு ரூ.96 லட்சம்.. இந்தியர்களின் என்னவாகும்?

இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படும்.
Published on

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்புக்குப் பிறகு அங்குப் பணியாற்ற வழங்கும் 'OPT' விசாக்களுக்கு ஒரு லட்சம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 96 லட்சம் ரூபாய் கட்டணம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ஹெச்-1பி விசாக்களுக்கு இதே போன்ற கட்டணத்தை நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், இந்த புதிய நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படும்.

Student Work Visa
Student Work VisaReuters

OPT திட்டம் வெளிநாட்டுப் பட்டதாரிகளை மாணவர் விசாவில் ஒன்றுமுதல் மூன்று ஆண்டுகள் வரை வேலைசெய்ய அனுமதிக்கிறது. சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்கு இது முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். 2024ஆம் ஆண்டில் சுமார் 4,19,000 வெளிநாட்டினர் OPTஇல் பணிபுரிந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com