பளு தூக்கும் சிறுமி
பளு தூக்கும் சிறுமிஎக்ஸ் தளம்

ஹரியானா: 75 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கும் 9 வயது சிறுமி! வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்!

ஹரியானாவை சேர்ந்த சிறுமி ஒருவர் 75 கிலோ கொண்ட எடையை சர்வ சாதாரணமாக தூக்குவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பளுதூக்கும் வீரர், வீராங்கனைகளை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் பளுதூக்கும் சிறுமியை பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? ஹரியானாவை சேர்ந்த சிறுமி ஒருவர் 75 கிலோ கொண்ட எடையை சர்வ சாதாரணமாக தூக்குவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கே? எப்பொழுது என்பதை பார்க்கலாம்.

ஹரியானா பஞ்சுக்லாபகுதியைச்சேர்ந்த ஒன்பது வயது சிறுமியான ஹர்ஷியா கோஸ்வாமி என்பவர் 75 கிலோ கொண்ட (dead lifts)பளுதூக்கும் வீடியோ ஒன்று X வலைதள பக்கத்தில் வைரலாகி 2 மில்லியன் பார்வையாளரை கடந்து இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த வீடியோவானது உடற்பயிற்சி நிலையத்தில் கடந்த பிப்ரவரி 29 தேதி எடுக்கப்பட்டது என்றும் இதில் 9 வயது நிரம்பிய சிறுமி தேர்ந்த வீரரைப்போல பளு தூக்குவது பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com