\
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்பும் ஊழியர்கள்
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்பும் ஊழியர்கள்கோப்புப்படம்

78 % ஊழியர்கள், குடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புகின்றனர்!

உலகம் முழுவதும் பணிபுரியும் ஊழியர்களில் 78 சதவீதம் பேர் வேலையைவிட குடும்பத்துடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on: 

உலகம் முழுவதும் பணிபுரியும் ஊழியர்களில் 78 சதவீதம் பேர் வேலையைவிட குடும்பத்துடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Work life balance
Work life balanceகோப்புப்படம்

ஐந்தில் 4 பேர், குழந்தைகள், பெற்றோர், வாழ்க்கைத் துணை ஆகியோருடன் நேரம் செலவிட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 90 மணிநேரத்திற்கு மேல் பணிபுரிய வேண்டும் என L&T தலைவர் சுப்பிரமணியனும், 70 மணிநேரத்திற்கு மேல் பணியாற்ற வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்பும் ஊழியர்கள்
சிந்திக்கத் தூண்டும் சிந்தனைகள் 1 | 90 மணி நேர வேலை.. மட்டுமீறிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறதா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com