உலகம்
அமெரிக்கா : முகத்தில் குத்திய நபரை திருப்பி அடித்த 76 வயதான ஆசிய பெண் - வீடியோ வைரஸ்
அமெரிக்கா : முகத்தில் குத்திய நபரை திருப்பி அடித்த 76 வயதான ஆசிய பெண் - வீடியோ வைரஸ்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 76 வயதான ஆசியப் பெண்மணி, தெருவில் தனது முகத்தில் குத்திய ஒருவரை திரும்ப அடித்த வீடியோ வைரலாகியது.
இந்த சம்பவத்தின் வைரல் வீடியவில், வீங்கிய கண்களுடன் வயதான பெண்மணி கையில் ஒரு குச்சியைப் பிடித்திருப்பதையும், 39 வயதான நபர் ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதையும் காட்டுகிறது.
ஆசிய-அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆசிய மக்கள் மீது தொடர்ச்சியாக அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. சில நாட்களுக்கு முன்புகூட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.