தூங்கும் மூதாட்டியை கடித்த பாம்பு‌ : வெளியான சிசிடிவி காட்சிகள்

தூங்கும் மூதாட்டியை கடித்த பாம்பு‌ : வெளியான சிசிடிவி காட்சிகள்

தூங்கும் மூதாட்டியை கடித்த பாம்பு‌ : வெளியான சிசிடிவி காட்சிகள்
Published on

தாய்லாந்தில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை பாம்பு கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் வசித்துவரும் 75 வயதான மூதாட்டி காயிவ் சத்சொபா. இவர் இரவு படுக்கறை கதவை திறந்து வைத்து அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மலைப் பாம்பு ஒன்று, தூக்கத்தில்‌ காலை ஆட்டிக்கொண்டிருந்த மூதாட்டியின் காலில்‌ கடித்தது. உடனே ‌பதறியடித்துக்கொண்டு எழுந்த மூதாட்டி, டார்ச் லைட்டை அடித்து பார்த்தார். 

அப்போது அவரது காலுக்கு அருகில் பாம்பு நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் போட்ட சத்தத்தில், பாம்பு அச்சமடைந்து கழிவறைக்குள் புகுந்தது. தகவ‌லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கழிவறையில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர். மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும், மூதாட்டியின் மகன் வீட்டிற்குள் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com