\
வடகொரியா நிறுவப்பட்டதன் 73ஆவது ஆண்டு கொண்டாட்டம்: கண்கவர் ராணுவ அணிவகுப்பு

வடகொரியா நிறுவப்பட்டதன் 73ஆவது ஆண்டு கொண்டாட்டம்: கண்கவர் ராணுவ அணிவகுப்பு

வடகொரியா நிறுவப்பட்டதன் 73ஆவது ஆண்டு கொண்டாட்டம்: கண்கவர் ராணுவ அணிவகுப்பு
Published on

வடகொரியா நிறுவப்பட்டதன் 73ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி கண்கவர் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்பு நிகழ்ச்சியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் முழு கவச உடை அணிந்திருந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை குறிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வருகை தந்ததாக சொல்லப்படுகிறது. அதிபர் கிம் ஜாங் உன்னை இரண்டு குழந்தைகள் அழைத்து வரும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. கிம்மின் உடல் தோற்றம் பெரிய மாற்றம் கண்டுள்ளது புகைப்படம் மூலம் தெரிகிறது. இந்த அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பார்வைக்கு கொண்டு வரப்படவில்லை. கிம்மும் உரையாற்றவில்லை எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com