
நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் 70 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டைக்குச் செல்லும் சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையில் மட்டும் 200 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: 72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்
இந்நிலையில் ராஜ்கட் வந்த பிரதமர் மோடி, காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செங்கோட்டைக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, அனைவரும் இந்திய தேசிய மூவர்ணக் கொடிக்கு மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.