தாக்குதல் நடந்த மருத்துவமனை
தாக்குதல் நடந்த மருத்துவமனைஎக்ஸ் தளம்

சூடான் மருத்துவமனையில் தாக்குதல்: 70 பேர் பலி, 19 பேர் படுகாயம்

சூடானின் டார்பூர் பகுதியில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளதாகவும் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் WHO தலைவர் தெரிவித்துள்ளார்.
Published on

சூடானின் எல்ஃபேஷர் நகரில் இயங்கி வரும் மருத்துவமனை ஒன்றில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருக்கும் நோயாளிகள் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 70 பேர் இறந்துள்ளதாகவும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சம்பவம் நடந்த நேரம், மருத்துவமனையானது நோயாளிகளால் நிரம்பி இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

இத்தகைய கொடூர சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், சில உள்ளூர் அதிகாரிகள், இந்த சம்பவத்திற்கு விரைவு ஆதரவுப்படை கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என்று கூறி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com