\
பங்களாதேஷ் தீ விபத்து: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

பங்களாதேஷ் தீ விபத்து: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

பங்களாதேஷ் தீ விபத்து: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!
Published on: 

பங்களாதேஷில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. 

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள சாக்பஜார் பகுதியில் ஹாஜி வாஹத் மேன்சன் என்ற நான்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் தரைத்தளத்தில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றின் பண்டகச்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட் டது. இந்த தீ, அக்கம் பக்கத்து கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது. 

தீ விபத்து நடந்த இடம் குறுகலானது என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் அங்கிருந்து தப்பிக்க முடியாமல், தீயில் சிக்கிக்கொண்டனர். பலர் தீயில் கருகி பலியாயினர். இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.