\
₹7 Lakh Crore Military Advanced Jets Yet Saudi Arabia Struggles Against Houthis
Model imagegoogle gemeni

ராணுவத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.. அதிநவீன விமானங்கள்.. இருந்தும் ஹவுதியிடம் தோற்கும் சவூதி!

குறிப்பாக, ஹவுதிகள் தாக்குவதற்குப் பயன்படுத்தும் ஒரு சிறிய ட்ரோனின் மதிப்பு சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே.
Published on: 
Summary

சவூதி அரேபியா உலகின் மிகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்ட இராணுவங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. மேலும் அது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6.5% - 7%-க்கும் அதிகமான தொகையை சவூதி அரேபியா பாதுகாப்பிற்காக மட்டுமே செலவிடுகிறது. எனினும், ஹவுதிகளுக்கு எதிராக அது திணறுவது ஏன்? இந்த கட்டுரையில் அலசுவோம்..

போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவுக்குப் பிறகு ஏமனில் ஒரு பகுதியாக இருந்து செயல்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவூதி அரேபியா ராணுவத்துக்கும் இடையே சமீபகாலமாக தொடர்ந்து தாக்குதல் அதிகரித்து வருகிறது. சவூதி அரேபியா ஏமனில் தனது இராணுவ ஈடுபாட்டை அதிகரித்துள்ளபோதிலும் இந்த பதற்றம் நாளுக்கு நாள் நீள்கிறது. கடந்த மாத தொடக்கத்தில், ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர். மேலும், இந்த வெற்றி, அவர்களை உலகின் வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் வழக்கமாக கடந்து செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் முற்றுகையிடும் அளவுக்கு வளர்த்துள்ளது. இதனிடையே, மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் துருக்கியும், பாகிஸ்தானும் தனது ராணுவங்களை சவூதிக்கு அனுப்பி, ஹவுதிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. எனினும், அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது ஹவுதி அமைப்பு. இதனால், அப்பகுதியில் போர் மேலும் தீவிரமடையும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது.

₹7 Lakh Crore Military Advanced Jets Yet Saudi Arabia Struggles Against Houthis
ஏமன் போர் | சவூதிக்கு உதவி.. நெருங்கும் பெரிய ஆபத்து.. தானாய்ச் சிக்கிய பாகிஸ்தான்!

உலகிலேயே ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியாவும் உள்ளது. தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6.5% - 7%-க்கும் அதிகமான தொகையை சவூதி அரேபியா பாதுகாப்பிற்காக மட்டுமே செலவிடுகிறது. சர்வதேச அமைப்பான SIPRI (Stockholm International Peace Research Institute) தரவுகளின்படி, சவூதி அரேபியா ஆண்டுதோறும் தனது ராணுவத்திற்காகச் சுமார் 70 பில்லியன் முதல் 83 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹6.5 லட்சம் கோடி முதல் ₹7 லட்சம் கோடி வரை) செலவிடுகிறது. இந்த தொகை மூலம், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து சவூதி அரேபியா, F-15 போர் விமானங்கள், பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகள், நவீன டாங்கிகள் என உலகின் அதிநவீன ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது. குறிப்பாக, ஹவுதிகள் தாக்குவதற்குப் பயன்படுத்தும் ஒரு சிறிய ட்ரோனின் மதிப்பு சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே.

ஆனால், அதை வான்வெளியிலேயே சுட்டு வீழ்த்த சவூதி பயன்படுத்தும் 'பேட்ரியாட்' ஏவுகணையின் மதிப்பு 20 முதல் 30 லட்சம் டாலர்கள் வரை ஆகும். இது, சவூதிக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம், ஏமன் நாட்டின் செங்குத்தான, கரடுமுரடான மலைப் பகுதிகளே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய இயற்கை அரணாகச் செயல்படுகின்றன. இதனால், சவூதியின் அதிநவீன டாங்கிகள் மற்றும் கனரக வாகனங்களால் இந்த மலைப்பகுதிகளுக்குள் எளிதில் முன்னேற முடிவதில்லை. இப்பகுதிகளில் ஹவுதி அமைப்பினர் இருந்து மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடும் உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளில் ஹவுதி அமைப்பினர், தங்களது படைகளையும் ஆயுதங்களையும் மெருகேற்றி உள்ளனர். ஏமனிலிருந்து சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் வரை சென்றடையக்கூடைய இலக்குகளை அவர்கள் வைத்துள்ளனர். இதன் காரணமாகவே ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சவாலைச் சந்திக்கிறது.

₹7 Lakh Crore Military Advanced Jets Yet Saudi Arabia Struggles Against Houthis
இரண்டு மெகா திட்டம்.. கூட்டணி அமைத்த ஏமன், சவூதி.. தப்பிக்குமா ஹவுதி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com