நைஜீரியா: தொழுகையின் போது இடிந்து விழுந்த மசூதி! சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் தொழுகையின் போது மசூதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியா கடுனாவில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com