உலகம்
கொரனா வைரஸ் அச்சம்: 7000 பேருடன் நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பல்
கொரனா வைரஸ் அச்சம்: 7000 பேருடன் நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பல்
கொரனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இத்தாலியில் 7 ஆயிரம் பயணிகளை கொண்ட கப்பல் நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் பணியாளர்கள் உள்பட 7 ஆயிரம் பேருடன் சென்ற கோஸ்டா ஸ்மரால்டா என்ற சொகுசு கப்பல் இத்தாலியின் சிவிடவேச்சியா என்ற துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் பயணித்த சீனாவின் மக்காவு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரும் அவரது கணவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ ஆய்வு முடிவுகள் வரும் வரை மற்ற பயணிகள் அனைவரும் கப்பலிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க இத்தாலி அரசு மறுத்துவிட்டதால் நடுக்கடலில் 7 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர்.