கேக் சாப்பிடும் போட்டி: தொண்டையில் கேக் சிக்கி உயிரிழந்த பெண்!

கேக் சாப்பிடும் போட்டி: தொண்டையில் கேக் சிக்கி உயிரிழந்த பெண்!

கேக் சாப்பிடும் போட்டி: தொண்டையில் கேக் சிக்கி உயிரிழந்த பெண்!
Published on

கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட பெண்ணின் தொண்டையில் கேக் சிக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா தினத்தை அந்நாடு கொண்டாடியது. இதனையடுத்து குயின்ஸ்டேண்டில் உள்ள ஹர்வேபே என்ற ஹோட்டலில் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆஸ்திரேலியா நாட்டின் புகழ்பெற்ற கேக்கான லேமிங்டனை சாப்பிட வேண்டும். வெண்ணெய், சாக்லெட் மற்றும் தேங்காய் துருவல்களால் இந்த கேக் உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த கேக்கை அதிகம் சாப்பிடுபவர்கள் போட்டியின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக கேக்கை சாப்பிட்டுள்ளார். இதனால் தொண்டையில் கேக் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.

ஹோட்டல் நிர்வாகம், உயிரிழந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com